Pages

Sunday, November 29, 2009

மனித பரிணாமத்தின் முக்கியத்துவம்...

இந்த பூமியில் பரிணாம வளர்ச்சி ஆரம்பம் ஆனா நாள் முதல் ஓர் அணுவில் இருந்து  புல்லாகி, புழுவாகி,பறவையாகி படி படியாய் செடியாகி, காய்க்கும் மரமாகி, திரியும் விலங்காகி, இறுதில் மனிதனாகி  மனித பரினமத்தின் முக்கியத்துவம் தெரியாமலே வாழ்ந்து மடிகிறோம். ஏன் இந்த பரிணாம மாற்றம் என்று தெரியாமலேயே மனித வாழ்கை முடிகிறது. நாம் ஏன் இந்த உடல் கொண்டம்? உயிர் கொண்டோம் ?சிந்தனை (அறிவு) கொண்டோம் ?என்று சிந்திக்க காலம் எழாமலே மடிகிறோம்.
இந்த மனித பரினமத்தின் முக்கியத்துவம் பற்றி இங்கு சிறிது எனக்கு தெரிந்த வரையில் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.


நம் உடல் ஒரு கருவி(இயந்திரம்) போன்றது.
நம் உயிர் தான் அந்த இயந்திரத்தை இயக்கும் சக்தி.
இந்த இரண்டும் சேர்ந்து தனது தேவையை நிறைவேற்றி கொள்ளும். இறுதியில் நம் உடல் என்ற இயந்திரம் நாளடைவில் செயலற்று போகும் பொழுது இந்த நான் என்ற உயிர் சக்தி யானது அதன் இச்சையை நிறைவேற்றிக்கொள்ள  மற்ற்றொரு இயந்திரத்தை தேடுகிறது. இவாறு ஓவ்வரு முறையும் தனது தேடலை (இச்சையை) தொடர்கிறது. அது தான் மறு ஜென்மம் என்பார்கள்.

அவ்வாறு நம் உடல் (இயந்திரம்) தேர்வு செயப்படும். அந்த உடலை இயக்கும் சக்தியானது முன் ஜென்மத்தில் தான் பெற்ற அறிவு வளர்ச்சியை  (பரிணாமவளர்ச்சி) பொருத்து புழுவா? பூச்சியா? செடியா? மரமா? பறவையா?
விலங்கினமா? மனிதனா? என்று அமையும்.

இதை உணர ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சிங்கம் ஒன்று வாழ்ந்து வருகிறது. உணவிற்காக தனது உணவை தானே வேட்டையாடி உண்கிறது.
இச்சயடையும் போது புணர்கிறது, உறங்குகிறது. பின்பு என்றாவது ஒரு நாள் இறந்து விடுகிறது. அது பெற்று எடுக்கும் சிங்க குட்டியும் அவ்வாறே செய்கிறது.
ஏன் என்றால் அதன் அறிவு வளர்ச்சியானது அவ்வளவுதான்.இதை போலத்தான் எல்லா ஜீவராசிகளும். 
ஆனால் மனிதன் மட்டும் அதிலிருந்து சற்று விதிவிலக்கானவன்.  அவனுக்கு சிந்தித்து செயல்படும் பகுத்தறிவு உள்ளது.
குரங்குகளும் அந்த விலங்குகளை போலத்தான். குரங்கிளிரிந்துதான் மனிதன் பிறந்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

ஆரம்ப கால கட்டத்தில் மனிதன் குரங்கிலிருந்து சற்றே வித்தியாசமகதான் சுற்றி திரிந்தான் விலங்கை போலவே, ஆனாலும் அவன் சிந்திகும் திறன் பெற்றிரின்தது 
குறிப்பிடத்தக்கது.
முதலில் பச்சை காய்கறிகள்,மாமிசத்தை உண்டு வாழ்ந்தவன்! நாளடைவில் சுட்டு உண்ண ஆரம்பித்தான். அவ்வாறாக நாகரிகவளர்ச்சி பெற்ற மனிதன் தற்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான் என்பது குறிபிடத்கது. ஒரு சிலரை தவிர!
தற்போது உள்ள மனிதர்கள் உண்கிறார்கள், புனர்கிறார்கள், வேலை செய்கிறார்கள், நிறைய பணம் சேர்த்து அதை அனுபவித்தும், அனுபவிகமலும் இருதியில் மாண்டுவிடுகிரர்கள். இந்த பிறப்பில் அவர்கள் அடையும் இன்ப, துன்பங்கள் ஆயிரம் என்றாலும்! இவை மட்டுமே மனித பிறப்பின் சாராம்சம் என்று கருதி எதை மட்டுமே திரும்ப திரும்ப எல்லா பிறப்பிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பிறப்பும் பிறந்து வந்து எதனை கண்டார்கள்?
இந்த மனித பரிணாமத்தின் நோக்கம் தெரியாமலேயே உண்டும், புணர்ந்தும், தம் இச்சைகளை தீர்துகொண்டும் சராசரி விலங்கைபோலவே(சற்று வித்தியாசமாக) வாழ்ந்து மடிகிறார்கள். 
இப்படியே கோடிகணக்கான மனிதர்கள் பிறகின்றார்கள். இறகின்றர்கள். மக்கள் தொகை பெருகதிற்கு எதுவே காரணமாகும்.
இதில்  நாம் ஏன் இப்படி விலங்கை போலவே வாழ வேண்டும்? என்று சிந்திபர்வர்கள் மட்டுமே மனித பிறப்பின் சாராம்சத்தை உணர்கிறார்கள்.
அவர்கள் தான் இந்த "நான் யார்?" என்பதின் சாராம்சம் உணர்ந்து. அதன் படி வாழ்ந்து, இறுதில் உண்மையை உணர்ந்து தனது பிறப்பை (மறுஜென்மத்தை) விடுக்கிறார்கள்.
இப்படி "நான்" என்ற ஆத்மா உணர்வை உணர்ந்தவர்கள் தான் நாம் ரிசிகளும், முனிவர்களும், சித்தர்களும் ஆவர்கள்.
இப்படியாக, இந்த     
'நான்' என்ற சொல் எங்கிருந்து வந்தது ? 
'நான்' என்பது யாருக்கு சொந்தம்?
எல்லோரும் 
'நான்' அதை செய்தேன். 
'நான்' இதை செய்தேன்.
என்று சொல்கிறார்கள்.

அந்த 'நான்' என்ற சொல் யாருக்கும் சொந்தம் இல்லை.
அது எங்கிருந்து வந்தது? எங்கு செல்கிறது என்று உணர்வது அசாதாரணம்.

அந்த 'நான்' என்ற சொல் எங்கிருந்து வருகிறது என்று, எனக்கு தெரிந்த வரை இங்கு விளக்க உள்ளேன்.
'நான்' என்ற சொல் ஒரு அம்பு [வில் அம்பு] போன்றது.
அது எங்கிருந்து எதை குறி வைத்து ஏவப்பட்டுள்ளது ?
யாரால் ஏவப்பட்டது? என்று அந்த அம்புக்கு தெரியாது.
ஆனால்! அது அந்த இலக்கை அடையும் வரை 'நான்' தான் செல்கிறேன்.
'நான் தான் உன்னை குறி வைத்தேன். என்று சொல்லி  கொள்ளும்.

அது போலத்தான் இந்த மனித இனமும்.
'நான்' அதை செய்தேன்., 'நான்' இதை செய்தேன் என்று சொல்லி கொள்வது
அந்த அர்த்தமற்ற அம்பு சொல்லி கொள்வது போலவே அமையும்.

" 'நான்' என்பது ஒரு அசாதாரமான வஸ்து ".
அந்த சொல் எங்கிருந்து வந்தது? வந்த நோக்கம் என்ன? அது மீண்டும் எங்கு செல்லும்?
என்பதை பற்றி சற்று சிந்தித்தல் போதும்.
 மனித பரிணாம வளர்ச்சின் சாராம்சம் புரிந்து கொண்டு உண்மையான 
மனித வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுவான்.    
                                                                                              -----தொடரும்
                                                 -நான் சிவம்        
   

0 comments:

Post a Comment

எங்கு மதம்[ஆத்திகம்] முடிகிறதோ, அங்குதான்
மனித நேயம் ஆரம்பம் ஆகிறது.
நாத்திகம் பேசும் ஆத்திகன் நான்....
அறிவின் முதிர்ச்சிதான், தூய தெளிந்த உண்மையான பகுத்தறிவின் கொள்கைதான் நாத்திகம்.